அர்மீனியா, அசர்பைஜான் மோதல் – மோதலைத் தடுக்க ரஷ்யா, பிரான்ஸ் அழைப்பு

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க அண்டை நாடுகளான ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

அர்மீனியா – அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே 6-வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நகோர்னா – கராபக் (Nagorno-Karabakh) எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அர்மீனியாவுக்கு எதிரானப் போரில் அசர்பைஜான் நாட்டிற்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, விமானம் மூலமாக சிரியா, லிபியா கிளர்ச்சியாளர்களை போருக்கு அனுப்பியுள்ளது. இதனிடையே போர்பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா. வலியுறுத்தியது. இந்நிலையில், அண்டை நாடுகளான ரஷ்யாவும், பிரான்சும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளன.

இந்நிலையில், அர்மீனியா நாட்டின் பீரங்கிகள் சுட்டு வீழ்த்தப்படும் வீடியோ காட்சியை, அசர்பைஜான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையிலும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

Exit mobile version