கடந்த 2017ம் ஆண்டு காலமாகிய முன்னாள் தமிழக முதல்வர் .அம்மா நினைவிடம் கட்டத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி மறைந்த செல்வி. அம்மாவின் இறுதிச்சடங்குகள் பெருந்திரளான மக்களின் கண்ணீர்க்கடலுக்கு நடுவில் வங்கக்கடலின் கரையோரத்தில் நடந்தது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்திற்கு அருகில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அம்மாவின் நினைவாக எதிர்கால தமிழகத்திற்கு அம்மாவின் சாதனைகளை விளக்கும் வண்ணம் மணிமண்டபம் ஒன்று பீனிக்ஸ் பறவையின் வடிவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாதம் இது திறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அம்மாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றும், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறி நினைவிடம் அமைக்கப்படுவதாகவும் எம்.எல்.ரவி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அரசு தரப்பில் இந்த வாதம் மறுக்கப்பட்டு “ தீர்ப்பு வரும்முன்பே அம்மா அவர்கள் இறந்து போயிருந்ததாலும் , மேலும் தீர்ப்பில் தண்டனை இவருக்கு வழங்கப்படாததையும் சுட்டிக்காட்டி இதனை மறுத்தார் ”
இந்த வழக்கின் போக்கில் விசாரணையின் போது வெளிவந்த தகவல்கள் முறையானதாகவும், உரிய அனுமதி பெற்று நடப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது. மேலும் கடலோர ஒழுங்குமுறைகள் மீறப்படுவதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டை மாநில கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம் அளித்த சாட்சியம் தவிடுபொடியாக்கியது.
அதுபோக , குற்றவாளி இல்லை என்பதால் அரசு கொள்கை முடிவெடுத்து நினைவிடம் கட்டத் தயாராகிரது என்றும் வாதம் வைத்தது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த பின் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கில் தீர்ப்புக்கு முன்பே அம்மா இறந்ததால் தண்டனை அறிவிக்கப்படவில்லை, எனவே அம்மாவை தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றும் கூறி, அம்மாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கத் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடுவது எதிர்காலத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளின் மீது பிரதிபலிக்கும் என்பதும் இங்கு கருதுகோளாகக் கொள்ள வேண்டியது.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் எனும் இயற்கை
மறுமத்தை நம்மாலே உலகம் கற்கும்
என்ற பாரதியின் வரிகளுக்கு மீட்டொருமுறையும் சான்று தந்திருக்கிறது இந்த நிகழ்வு.
அண்ணா , எம்,ஜி,ஆர் அடுத்தபடியாக தமிழகத்தில் பதவியிலிருந்தபடியே இறந்த முதல்வர் இவர் ஒருவரே. எதிர்கால வரலாறு இவரை அறிந்துகொள்ள இந்த நினைவிடம் முக்கியமான இடமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆவி பிரிந்த பின்னும் அதிமுக விற்கு வெற்றியையே பெற்றுத்தரும் வாகைநாயகி அம்மாவின் நினைவை எல்லோரும் வைகலும் போற்றுவோமாக