ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி ரயில்வே ஜங்ஷன் தமிழகத்தின் மிக முக்கிய போக்குவரத்துக்கு மையமாக விளங்குகிறது.
திருச்சி ரயில்வே ஜங்ஷனுக்கு நாள் ஒன்றுக்கு 110 க்கும் மேற்பட்ட அதிவிரைவு ரயில்களும், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும் வருகிறது. இங்கு 7 நடைமேடை மற்றும் 32 தண்டவாளங்கள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள ரயில்வே காவல்துறையினர், மிகவும் துரிதமாகவும், சானர்த்தியமாகவும் செயல்பட்டு குற்றங்களை தடுக்கின்றனர்.. கடந்த இரண்டு ஆண்டுகளில், வழிதவறி திருச்சி வந்த 236 சிறுவர் சிறுமியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் .கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜுலை மாதம் வரை மூவாயிரத்து 860 வழக்குகள் பதியப்பட்டு அவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை.