திருச்சி திமுக தலைமைக்கு தலைவலி! முட்டிக்கொள்ளும் மூன்று பெரிய தலைகள்!

திருச்சியப் பொறுத்தவரைக்கும் திமுகவுக்கு தலைவலிதான். ஏன்னா அங்க கே.என்.நேரு, அன்பில்மகேஷ்னு ரெண்டு அமைச்சர்கள் இருக்கிறதோட, நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவும் இருக்கிறதால, அங்க மூணாப் பிரிஞ்சி முட்டல் மோதல்தான்… ஆனா வெளியிலபார்த்தா முஸ்தபா முஸ்தபான்னு தோள்ல கைய போட்டுட்டு போட்டோவுக்கும், வீடியோவுக்கும் விளம்பரம் கொடுத்துட்டு இருப்பாங்க… இப்பக்கூட சமீபத்துல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்துச்சு. அதுல அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏக்கள் அப்துல் சமது, இனிக்கோ இருதயராஜ் கலந்துகிட்டாங்க… ஆனா அமைச்சர் நேரு அந்த கூட்டத்தில கலந்துக்கலையாம்… அதனால அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களான பழனியாண்டி, தியாகரான், ஸ்டாலின்குமார், சவுந்திர பாண்டியன் மற்றும் மேயர் அன்பழகனோ பங்கேற்கலையாம்… அதுமட்டுமில்லாம நேரு தலைமையில தனியாக ஆய்வுக்கூட்டம் போடணும்னு அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆட்சியர்கிட்ட வலியுறுத்தி இருக்காங்களாம்… அமைச்சர்களோட ஈகோவால அரசு அதிகாரிகளும் யார் சொல்லறத கேக்குறது? இப்படி இருந்தா பணிகள எப்படிப் பார்க்கிறதுன்னு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம்… அமைச்சர்கள் மீதான ஊழல்புகார்களால ஏற்கனவே கட்சித் தலைமை கடுகளவு கூட தூங்காம இருக்கு… இப்ப அமைச்சர்களுக்குள்ள நடக்குற ஈகோ யுத்தம் தலைமைய தலைவலியிலேயே வச்சிருக்கும் போல-ன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க!

Exit mobile version