சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சட்டப்பேரவை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று துவங்கியது. மறைந்த உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ், விக்கிரவாண்டி ராதாமணி ஆகியோருக்கும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கும் முதல் நாளான இன்று இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்ததை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திங்கட்கிழமை முதல் துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் துவங்கும். அன்றைய தினம் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 30 ஆம் தேதி வரை, 23 நாட்கள் நடைபெற உள்ளது.

 

Exit mobile version