தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு விரைவில் பயிற்சி: மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தலுக்கு தேவையான வாக்காளர் பட்டியல், வாக்கு இயந்திரங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அதில் உள்ளாட்சி தேர்தலுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதற்கட்ட சோதனை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சியை விரைவில் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றத்தில் 4 வாரம் அவகாசம் கேட்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து பணிகளை விரைவாக முடிக்க, தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version