சேலம் அருகே தோட்டக்கலைத் துறையின் சார்பாக விவசாயிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சி முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் சார்பாக மரவள்ளிக் கிழங்கு மற்றும் வாழை மதிப்பு கூட்டப்பட்ட பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் பயிரிடும் மரவள்ளி கிழங்கு மற்றும் வாழை மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு, தின்பண்டங்கள் தயார் செய்வது குறித்தும், எவ்வாறு மாற்று வழியை பயன்படுத்தலாம் என்பது குறித்தும், தோட்டக்கலை துறை வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்வில், மாவட்டம் முழுவதும்
இருந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.