தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்கின்ற மழை நீரானது, சிறு சிறு ஓடைகள் வழியாக வந்து கும்பக்கரை அருவியை வந்தடைகின்றது. தற்போது கோடை விடுமுறை என்பதால் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.