கொடைக்கானலின் இதமான சூழலை அனுபவிக்கவும், கோடை விடுமுறையைக் கொண்டாடவும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் தற்பொழுது லேசான வெயில் அடிப்பது, அவ்வப்போது இதமான சாரல் மழை பெய்வதும், குளிர்ந்த காற்று வீசுவதுமான பருவநிலை உள்ளது. இதமான சூழலை அனுபவிக்கவும், கோடை விடுமுறையைக் கொண்டாடவும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள், பிரையன்ட் பூங்கா, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் வியாபாரம் களைகட்டி இருப்பதால், வணிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.