தேனி மாவட்டம் சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் 5 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு நலன் கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால் சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனையடுத்து 5 நட்களுக்கு பிறகு அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அருவியில் குளிக்க வந்த வண்ணம் உள்ளனர்.