தேனி சுருளி அருவியில், நீர் வரத்து அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததால், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், தண்ணீரின் வேகம் குறையும் வரை தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.