தமிழ் சினிமாவில் நண்பர்களுக்கான டாப் -10 பாடல்கள் இதுதான்…

1. முஸ்தபா…முஸ்தபா….(காதல் தேசம்)

நமக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நட்புக்கான அர்த்தத்தை உணர்த்தியது இந்த பாடல் தான்.

2.காட்டுக்குயிலு(தளபதி)

எத்தனை பாடல்கள் நட்புக்காக வந்தாலும், தளபதி படத்தில் இடம்பெற்ற ’பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க’ என்ற பாடல் தான் இந்நாள் வரையிலும் வாட்ஸ் அப் ஸ்டேடஸில் வலம் வரும் பாடலாக உள்ளது.

3.என் ப்ரண்ட போல ( நண்பன்)

என் ப்ரண்ட போல யாரு மச்சான்..என்ற பாடல் கல்லூரி நாட்களில் நாம் செய்த சேட்டைகளை அழகாக நினைவு படுத்தியது.முக்கியமாக கல்லூரி விடுதியில் இருந்தவர்களுக்கு இந்த பாடல் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்.

4.தோழா..தோழா(பாண்டவர் பூமி)

இதுவரை நட்புக்கான பாடல் என்றால் ஆண்களுக்கானதாக மட்டும் இருந்தது.ஆனால் தோழா.. தோழா..தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும் என்ற பாடல் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பினை சுட்டிகாட்டியது .

’ஆணும், பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்,அது ஆயுள் முழுவதும் கலங்க படாமல் பாதுக்கலாம்’ என்ற வரி ஆணும், பெண்ணும் பழகினால் அது காதல் என அர்த்தம் இல்லை என்பதை உணர்த்திய பாடல்..

5.அந்த நாள் ஞாபகம்(உயர்ந்த மனிதன்)

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே … நண்பனே என்ற பாடல் நீண்ட நாள் பிறகு நண்பர்கள் சந்திக்கும் தருணத்திற்கு பொருத்தமான பாடல்.

6.கிழக்கே பார்த்தேன்(ஆட்டோகிராப்)

’கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்புத் தோழி’ என்ற பாடலும் ஆண்-பெண் நட்பினை குறிப்பது தான்.பாண்டவர் பூமியில் இடம்பெற்ற தோழா தோழா பாடலும், ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற அன்புத் தோழி பாடல் இரண்டுமே இயக்குனர் சேரன் இயக்கிய படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்.அவரின் படங்களில் ஆண்,பெண் நட்பிற்கு முக்கியத்துவம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

7.நண்பனை பார்த்த( நினைத்தாலே இனிக்கும்)

’உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
என் கல்லூரி வாழ்க்கை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்’

என்ற வரி கல்லூரி வாழ்க்கை ஒவ்வொருக்கும் மறக்கமுடியாத சந்தோஷத்தை கொடுத்து, அடுத்த ஜென்மத்தில் இந்த கல்லூரில் மரமாக நின்றால் கூட போதும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

8.ஒரு நண்பன் இருந்தால்(எனக்கு 20..உனக்கு 18..)

ஒரு நண்பன் இருந்தால் , கையோடு பூமியை சுமந்திடலாம் என்ற பாடல் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறது.

9.மனசே…மனசே(ஏப்ரல் மாதத்தில்)

கல்லூரியின் கடைசி நாளின் farwell-அன்று இந்த பாட்டு நிச்சயம் அனைவரின் மனதிலும் நீங்கா வலியை உண்டாக்கும்.

10.டாக்ஸி…டாக்ஸி…(சக்கரக்கட்டி)

’நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி’ என்ற வரியில் நண்பன் நமக்காக ஒரு டிரைவர் போல கூட செயல்படுவான் என்பத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்கள்.

Exit mobile version