இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நினைவு தினத்தில் அவரின் இசை ஜாலங்களை விவவரிக்கும் சிறப்பு தொகுப்பு

தமிழ் திரை இசையுலகின் முதல் சகாப்தம் என்ற சாதனை படைத்த திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நினைவு தினம் இன்று….

அவரின் இசை ஜாலங்களை விவரிக்கிறது இந்தத் சிறப்பு செய்தித் தொகுப்பு……

 

1918ம் ஆண்டு நாகர்கோவில் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் பிறந்த இசைத் திலகம், 1942ல் வெளியான மனோன்மணி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மிகக் குறுகிய நாடக் இசைத் தன்மையுடன் பயணித்துக் கொண்டிருந்த திரையிசையை அடுத்தக்கட்ட நகர்வுகளுக்கு செலுத்தியது என்றால், அது கே.வி.மகாதேவனாகவே இருக்க முடியும்.

தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெகுஜன ஈர்ப்பிலான பாடல்கள் ஒலிக்கத் துவங்கிய காலக்கட்டமாக இசைத் திலகத்தின் காலத்தினை கூறலாம்.

நதி எங்கே போகிறது என தனது இசையை கேள்வியாய் எழுப்பிய கே.வி.மகாதேவன், அதே இசையால் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? என்று நாணம் கொள்ளவும் செய்தார்.

மெல்லிசையால் இன்னிசை பேரிலக்கியம் படைத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

திரைப்படங்களில் தமிழ்த் தொன்மையை பறைசாற்றும் தெம்மாங்கு இசைக்கும் கே.வி.மகாதேவன் தான் முன்னோடி எனக் கூறுவது சாலப் பொருந்தும்.

அதற்கு சான்றாக, மண்மணத்துடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இசை மட்டுமில்லாது எஸ்.பி.பி போன்ற மாபெரும் ஆளுமைகளையும் அறிமுகப்படுத்தினார்.

பாடலுக்கான சரணத்தை அமைக்கும் போது, கடைசி வரியை வாத்தியங்கள் இல்லாமல் நிசப்தமாக அமைத்து மறுபடியும் பல்லவிக்குத் திரும்பும் தாளத்தில், ஒரு ‘பீட்’ முத்திரை கொடுப்பதில் அறிந்துகொள்ளலாம், இசைத் திலகத்தின் எல்லையற்ற இசைத் திறனை..!

தனது இசையை மானுடத்திற்கான அருமருந்தாக்கிய மாபெரும் இசைக் கலைஞனுக்கு புகழாஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறது நியூஸ் ஜெ.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அப்துல் ரஹ்மான்..

Exit mobile version