இன்றைய IPL போட்டியில் கொல்கத்தா-ராஜஸ்தான் மோதல்

12 வது ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் விளையாட்டு மைதானத்தில் நடக்கும் இந்த ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்கவுள்ளன. புள்ளிப்பட்டியலில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 4 வெற்றி 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 6 ஆவது இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 3 வெற்றி 7 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 8 ஆவது இடத்திலும் உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

Exit mobile version