ஐபிஎல் 2023 போட்டி அட்டவணை வெளியாகியது!

இந்தியாவைப் பொறுத்தவரை மதமாக கிரிக்கெட் பாவிக்கப்படுகிறது. அதுவும் ஐபிஎல் போட்டிகள் வந்தவுடன் கிரிக்கெட் மீதான கவனம் அதிகமாகிவிட்டது. தற்போது இன்றைய வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை வெளியாகியுள்ளது. மார்ச் 31 ஆம் தேதி இந்தப் போட்டிகள் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்சும் சென்னை சூப்பர் கிங்சும் மோத உள்ளன. கடந்த ஆண்டு புதிய அணியாக அறிமுகமாகி கோப்பையை வென்றிருந்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. இந்த வருடம் எந்த அணிகள் வெல்லும் என்று பரபரப்பாக உள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடத்தைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் எனப்படும் தகுதிச் சுற்றினை விளையாடும். அதில் குவாலிபயர் 1, எலிமினேட்டர், குவாலிபயர் 2 ஆகியவற்றை கடந்து மே 21 இறுதிப்போட்டி நடைபெறும்.

Exit mobile version