எங்கம்மாவுக்கு உடம்பு முடிலடா! டிக்கெட் வாங்கவழிய விடுங்கடா பாணியில் IPL Ticketக்கு தள்ளுமுள்ளு!

சென்னைச் சேப்பாக்கம் மைதானத்தில் வரும் மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதற்காக இன்று டிக்கெட் விற்பனை விற்கப்பட்டது. தோனி டொக்கு வைத்தாலே போதும், அதை காணாவே நாங்கள் தவமாய் தவம் கிடப்போம் என்று சொல்லும் வெறிப்பிடித்த தோனியன்ஸ் அலையலையாகக் கூடி டிக்கெட் வாங்கினர். இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு பெண் மயங்கி விழுந்துள்ளார்.

விளையாட்டுக்காக இவ்வளவு செய்யத் தேவையில்லை. விளையாட்டு விபரீதம் ஆகிவிடாமல் பொறுப்புடன் இரசிகர்கள் இருக்கவேண்டும் என்று விளையாட்டுத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சேப்பாக்கம் மைதானம் நிர்வாகம் பெண்களுக்கென தனி வரிசை அமைக்கவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியுள்ளது. மேலும் இரசிகர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

Exit mobile version