சென்னை சேப்பாக்கத்தில் ப்ளாக்கில் விற்கப்படும் ஐபிஎல் டிக்கெட்டுகள்..ரசிகர்கள் குற்றச்சாட்டு..!

நாளை நடைபெறவுள்ள IPL கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் பல மடங்கு அதிகமாக பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சென்னையில் நாளை நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டிக்கு அதிக விலையில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஐபிஎல் சீசன் போட்டிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் மொத்தம் விற்று தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் முழுமையான டிக்கெட்டை நிர்வாகம் விற்பனை செய்யவில்லை என்றும், குறைந்த அளவிலான டிக்கெட்டுகளை மட்டும் விற்பனை செய்துவிட்டு, மற்றவையை அதிக விலைக்கு ஏஜென்ட்கள் மூலம் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் கேட்டபொழுது, குறைந்த அளவிலான டிக்கெட்டுகளை மட்டுமே கவுண்டர் மூலம் விற்பனை செய்வதாகும், மற்ற டிக்கெட்டுகளை ஏஜென்ட்கள் மூலம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக 1500 ரூபாய் விலையுள்ள ஒரு டிக்கெட்டை, நான்காயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை இப்பதிகளில் விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Exit mobile version