சென்னை வந்தடைந்தார் ‘தல’ தோனி!

ஐ.பி.எல் தொடரானது இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிலும் முதல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்கிசிற்கும் குஜராத் டைட்டன்சுக்கும் இடையே நடைபெற இருக்கிறது. அதனையொட்டி பயிற்சியில் ஈடுபடுவதற்காக தோனி சென்னை வந்தடைந்தார். இதற்கு முன்புவரை ராஞ்சியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஆண்டுகளில் ஐ.பி.எல் போட்டியானது கொரோனா காரணமாக வெளிநாடுகளிலும், இந்திய நகரங்களில் சில குறிப்பிட்ட ஊர்களில் மட்டுமே நடைபெற்றது. தற்போது இந்த வருடம் அனைத்து அணிகளும் தங்களுடைய மாநில ஆடுகளங்களில் விளையாடுவதற்கு அனுமதி பெற்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 7 போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை வந்தடைந்தார் தோனி. அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Exit mobile version