டிஎன்பிஎஸ்சி முடிவுகளில் அரசு தலையிட முடியாது- முதல்வர்

டி.என்.பி.எஸ்.சி தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றும், தன்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், நீட் தேர்வு முறைகேடுகளை கண்டுபிடிப்பதே தமிழக காவல்துறைதான் என்றார். நீட் தேர்வு முறைகேடுகளை தமிழக காவல்துறை விசாரித்து வருவதாகவும், எதிர்காலத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

Exit mobile version