டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக இடைத்தரகர் ஜெயக்குமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பணம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக 43 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதன் அடிப்படையில், தீவிர விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர் 25 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில், தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், காவலர் பூபதி உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர். இதில், பலரிடம் பல லட்ச ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் பலரை முறைகேடாக தேர்ச்சி பெற வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவான ஜெயக்குமார் காவல்துறையில் சரணடைந்தார். இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version