கடந்த வருடம் ஜூலை 24 ஆம் தேதி இருபது லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப் 4 தேர்வினை எழுதினார்கள். பிறகு எட்டு மாதங்களாக அவர்களுக்கான தேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல் தட்டிக் கழித்துவந்த ஆணையம் மார்ச் இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதன் பிறகு கலந்தாய்வுக்காக தற்போது பல்வேறு மாணவர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் பல லட்ச மாணவர்கள் தங்கள் உழைப்பை இந்த தேர்வுக்கென ஒதுக்கி முழு முயற்சியையும் கொடுத்து தேர்வு எழுதியிருப்பதால், அவர்களுக்கான காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தொடர் கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அதிமுக கழகப் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கும் விடியா திமுக அரசிற்கும் தொடர் வலியுறுத்தல்களாய், பல லட்ச மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்குமாறு கூறியிருந்தார். டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கு ஆதரவு குரலாக அனைத்து இடங்களிலும் ஓங்கி ஒலித்தவர்களில் முதன்மையானவராக இருந்தார். தற்போது அதனையொட்டி டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 10,117ல் இருந்து, 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவுமே தேர்வர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில்தான் உள்ளது. இரண்டு ஆண்டுகளாக எந்தத் தேர்வுமே நடைபெறாமல் இருந்தநிலையில் இன்னும் சில காலிப் பணியிடங்களை அதிகரித்து இருக்கலாம் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.
Discussion about this post