காய்கறிச் சந்தை, மளிகைக் கடைகளில் நேரக் கட்டுப்பாடு அமல்

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் காலை முதலே சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காய்கறி கடைகள், சந்தைகள், மளிகை கடைகள் , இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தான் செயல்படும். சென்னையிலுள்ள காய்கறி சந்தைகள், மளிகை கடைகளில் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள காய்கறி அங்காடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சமூக இடைவெளியை கடைபிடித்து மளிகைப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Exit mobile version