ஒரேநாளில் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்

விடுமுறை நாளான நேற்று அத்திவரதரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தரிசித்து சென்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த மாதம் 1-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை சுமார் 46 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், கடந்த 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 35-வது நாளான நேற்று இளம் மஞ்சள் மற்றும் நீல நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வார விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தனர். பொது தரிசன பாதையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version