பீகார் வாலிபரை கொலை செய்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மூவர் கைது

பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபரை பணம் கேட்டு மிரட்டி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் ரசாம்பாளையத்தில் உள்ள முத்துமாணிக்கம் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த நவீன்குமார் வசித்து வந்தார். இவருடன் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் தத்தாவும் வசித்து வந்தார். மேலும் பீகார் மாநிலத்தை சேர்ந்த நிதிஸ்குமார் திண்டுக்கலில் வசித்து வந்தார். இந்த நிலையில் நவீன்குமார் நிதிஸ்குமாரிடம் நல்ல வேலை வாங்கி தருவாதாக கூறி ஈரோட்டிற்கு அழைத்துள்ளார். இதனை நம்பி வந்த நிதிஸ்குமாரை நவீன்குமார், அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தா ஆகியோர் கட்டி வைத்து 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். காவல் துறையினரிடம் நிதிஸை காணவில்லை என புகார் செல்ல இவர்கள் மூவரும் அவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Exit mobile version