வீரமரணமடைந்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கானோர் அஞ்சலி

தற்கொலை படை தாக்குதலில் உயிர் தியாகம் செய்த ஜம்மு காஷ்மீர் வீரரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் தலைமை காவலர் நசீர் அகமதுவும் வீர மரணம் அடைந்தார். டெல்லியில் 40 வீரர்களின் உடல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய பிறகு சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்தநிலையில் ரஜவுரி மாவட்டம் தோசன் பாலா கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நசீர் அகமதுவின் உடலுக்கு ஆயிரகணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த நசீர் அகமதுவுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version