சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திருமாவளவனின் சர்ச்சை பேச்சு

டெல்லியில் இருந்துகொண்டே தென்மாவட்டங்களில் தீப்பிடிக்க வைக்க முடியுமென்றும், வன்முறையைத் தூண்ட முடியுமென்றும் பொதுமேடையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது, பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

மக்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற பிறகு, திருமாவளவன் பொதுமேடையில் பேசிய காணொலிக்காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் பகிரங்கமாக வன்முறையைத் தூண்டும் விதத்தில் திருமாவளவன் பேசியுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பிரதிநிதி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசிக ஒரு வன்முறைக்கட்சி என்றும், கட்டப் பஞ்சாயத்து கட்சி என்றும் பரவலாக விமர்சிக்கப்படும் நிலையில் திருமாவளவனின் சமீபத்திய பேச்சு அதனை நிரூபிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.

Exit mobile version