டீ கடையில் கொள்ளை: சிசிடிவி ஆய்வுகளை வைத்து 12 மணி நேரத்தில் திருடன் கைது

சென்னை தரமணியில் உள்ள டீக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 12 மணி நேரத்தில் கொள்ளை போன பணம் மற்றும் கொள்ளையன் கண்டிபிடிக்கப்பட்டதற்கு காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை தரமணி சிஎஸ்ஆர் சாலை வி.வி. கோயில் தெருவில் சாதுல் இஸ்லாம் என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், மேற்கு வங்க மாநில இளைஞர் லோகேஷ் என்பவர் அந்த டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 11 ஆம் தேதி பணியை முடித்து விட்டு சாதுல் இஸ்லாம் வீடு திரும்பியுள்ளார். மறுநாள் கடைக்கு சென்ற அவர், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ந்த அவர், காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் கடையில் வேலை பார்த்து வரும் லோகேஷ் என்பவர் தனது நண்பருடன் சென்று, அங்கிருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவைகளை திருடி சென்றுள்ளார். இதனையடுத்து லோகேஷை கைது செய்த காவல் துறையினர் அவரது நண்பர் ஜெராஸ் இஸ்லாம் என்பவரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 17 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

 

Exit mobile version