யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கொள்ளை – தொழில் நஷ்டத்தால் எடுத்த விபரீத முடிவு!

ஒடிசா மாநிலம், டாங்கிபெண்டா கிராமத்தைச் சேர்ந்த துணி வியாபாரி சௌம்யாராஜன் ஜீனா. 25 வயதாகும் இவருக்கு ஊரடங்கு காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீண்டெழுவதற்காக வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார்.

அதன்படி, இந்தியன் ஓவர்சிஸ் மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளைத் தேர்வு செய்தார். பொம்மை துப்பாக்கிகளை பயன்படுத்தி ரூ.12 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக புபனேஷ்வர் காவல் ஆணையர் சாரங்கி என்பவர் பேசுகையில், `ஊரடங்கு காரணமாக தொழிலில் நஷ்டமடைந்துள்ளதால், இரண்டு வங்கிகளிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார் சௌம்யாராஜன். அதன்படி யூடியூப்பில் எப்படி கொள்ளையடிப்பது என்பது குறித்த வீடியோக்களைத் தேடிப்பார்த்துள்ளார்.

அதன்படி, பொம்மை துப்பாக்கிகளை பயன்படுத்தி, இரண்டு வங்கிகளிலும் சேர்த்து ரூ.12லட்சம் வரை கொள்ளையடித்துள்ளார். அவரிடமிருந்து ரூ.10லட்சம் வரையிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூடவே, கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனம், பொம்மை துப்பாக்கியும் கைப்பற்றியுள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version