தன்னுடைய கருத்துக்களை டிரம்ப் விமர்சித்ததால் அமெரிக்கா, இங்கிலாந்து உறவில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூரர் கிம் டர்ரொச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான இங்கிலாந்து தூதராக இருக்கும் கிம் டர்ரோச் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பிய கடிதம் வெளியானதால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதில், டிரம்ப் அமெரிக்க அதிபராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும், அவரால் வெள்ளை மாளிகையில் குழப்பம் நிலவுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், கிம் டர்ரோச்க்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரை பற்றி விமர்சனம் செய்ததால் இரு நாடுகளான உறவு பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கிம் டெர்ரோச், இரு நாடுகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை தான் அமெரிக்காவிற்கான இங்கிலாந்து தூதராக தொடருவதாகவும், இந்த கருத்துக்களால் இரு நாடுகளுடனான உறவு பாதிக்காது என்றும் கூறியுள்ளார்.