தமிழகத்தில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லாத சூழல் உருவாக்கப்படும்

தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணி இடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை இன்று துவங்கியதும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராசமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து நடைபெற்ற கேள்வி நேரத்தில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நட்ராஜ் கேட்ட கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 943 பேரில் 239 பேருக்கு பணி வழங்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

இதேபோல் திமுக உறுப்பினர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்தவுடன் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களே இல்லாத சூழலை தமிழக அரசு உருவாக்கும் என்றார்.

Exit mobile version