மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். விழாவில் சிறப்புரையாற்றிய அவர், மாணவர்கள் தங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இயற்கையை பாதுகாக்க குறைந்தபட்சம் ஒரு மரத்தையாவது மாணவர்கள் நட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கல்வியால் மட்டுமே நாடு வளர்ச்சியடையும் என குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் வளர்ச்சிக்காக அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் கூறினார்.

Exit mobile version