7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சட்டப்பேரவை கேள்வி நேரம் தொடங்கியதும் திமுக உறுப்பினர்  டி.ஆர்.பி. ராஜா, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நீடாம்பள்ளி சுற்றுச்சுவர் உடனடியாக சீரமைக்கப்படும் எனவும், உள்ளாட்சித்துறை அமைச்சர் நிதி ஒதுக்கீட்டின் படி ஆயிரத்து 600 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், 7 ஆயிரம்  தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு  7ஆயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தேசியக் கொடியை உருவாக்கிய குடியாத்தம் பகுதியில் ஜவுளிப்பூங்கா அமைக்க வேண்டுமென எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதேபோல், ஜவுளிப்பூங்கா அமைப்பது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், 51 சதவீத நிதி உதவியுடன் தொழில் தொடங்க முன்வருபவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்தார்.

Exit mobile version