மதுரை அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் பெண்கள் மலர்தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். மேலும் வேட்பாளரை சிறப்பிக்கும் விதமாக தாரை தப்பட்டை, பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பும் நிகழ்ந்தது.