விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அமோக வெற்றி

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிப் பெற்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. 84 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

Exit mobile version