விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நம்பியாறு அணையில் நீர் திறப்பு

நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் நம்பியாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து, பாசன வசதிக்கு அணையில் இருந்து தண்ணீரை திறக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று, நம்பியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் ராஜலட்சுமி, அணை மதகை திறந்து வைத்தார். நம்பியார் நீர்த்தேக்கத்தின் மூலம் ஆயிரத்து 744 ஏக்கர் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version