பேருந்து மீது மோதிய லாரி – 7 பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டத்தில் சாலை வளைவில் அலட்சியமாக திரும்பிய லாரி, அரசுப் பேருந்து மீது மோதியதில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சத்தியமங்கலத்தை நோக்கி சென்ற அரசு பேருந்தில் பொதுமக்கள் பயணித்தனர்.

சிறுமுகை அடுத்த ஆலாங்கொம்பு அருகே, மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில், வேகமாக திரும்பிய லாரி ஒன்று அரசு பேருந்து மீது திடீரென மோதியது.

லாரி மோதிய வேகத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்விடத்தில் இருந்த பொதுமக்கள், பேருந்து பயணிகளை மீட்க முயற்சி மேற்கொண்ட நிலையில், தகவலறிந்து விரைந்த போலீசார் அனைத்து பயணிகளையும் மீட்டனர்.

அதில் படுகாயமடைந்த 7 பயணிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version