இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திண்டுக்கலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

கடந்த 21ஆம் தேதி இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திண்டுக்கல் மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி மவுன ஊர்வலம் சென்றனர்.

Exit mobile version