காங்கிரசோடு கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லி வரை சென்ற திமுகதான் அடிமைக் கட்சி என்று கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் விமர்சித்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிஜேபி தலைவர்கள் டெல்லியிலிருந்து சென்னை வந்ததை சுட்டிக் காட்டினார். ஆனால் திமுக டெல்லி வரை சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதை குறிப்பிட்ட அவர், இதிலிருந்து எது அடிமைக் கூட்டணி என்பதை மக்கள் அறிந்திருப்பதாக தெரிவித்தார்.