கஜா புயல் சேதம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியிடம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டது கஜா புயல். தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்டவை வேரோடு சாய்ந்தன. கூரை மற்றும் குடிசை வீடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து மக்களை மீட்கும் பணியில், அமைச்சர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் என தீவிரமாக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக வியட்நாம் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் தொலைபேசி மூலம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.