பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் நிலையில், அப்பகுதியில் சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக பாக்கெட் சாராயம், ஹான்ஸ் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகின்றனர். சாராயம் கேட்டு வெளி ஊரைச் சேர்ந்த நபர்கள் ஊருக்குள் சுற்றி வருவதால் அடிக்கடி திருட்டுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி சாராயப் பாக்கெட்டுகளின் கவர்களை கொண்டு வந்து பண்ருட்டி காவல் நிலையம் முன்பு கொட்டி முற்றுகையில் ஈடுபட்டனர். விடியா திமுக ஆட்சியில், போதைப் பொருட்களை விற்பவர்களை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post