பிளாஸ்டிக் தடை அரசாணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்தது. இது தொடர்பாக சிறுகுறு பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தவிர மற்ற பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.