தீபாவளியன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கோரி, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரிய வழக்கில், தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீபாவளியன்று காலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது. இதேபோன்று, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post