இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம்

இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லையில் தொடர் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கையை கண்டிக்கும் விதமாக இந்தியாவுக்கான அந்நாட்டு தூதரை நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை பாகிஸ்தான் மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம், இந்திய எல்லையில் இந்த ஆண்டு மட்டும் 1,962 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த தாக்குதல்களில் 50 இந்தியர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version