இலங்கை குண்டுவெடிப்பில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு இருப்பதாகதேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
2016ஆம் ஆண்டு, கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து பல்வேறு நாடுகளுக்கு தப்பினர். இந்நிலையில் இலங்கை குண்டு வெடிப்பில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கும், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்து, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அவர்களது இல்லங்களில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள், சிம்கார்டுகள், மெமரிகார்டுகள், பென் டிரைவ்கள், அரபி மற்றும் மலையாளத்தில் எழுதப்பட்ட டைரி குறிப்புகள், மதவாதியான ஜாஹீர் நாயக்கின் பேச்சுகள் அடங்கிய சிடிக்கள் ஆகியவற்றை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.