காஞ்சிபுரத்தில், தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவனை, கழுத்தறுத்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த பெண், தனது 14 வயது மகனோடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காஞ்சிபுரம் அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் விமலாராணி என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கணவனை சாய்ஸில் விட்டு விட்டு, ராஜா என்பவரை விருப்ப பாடமாக படித்து வந்துள்ளார் விமலாராணி.
கால நேரம் பார்க்காமல் கணவன் குடும்பத்திற்காக உழைத்து கொட்ட, கள்ளக் காதலுடன் கண்ணும் கருத்துமாக ((கட்டில்)) கச்சேரி நடத்தி வந்துள்ளார் விமலா ராணி. விஷயம் அறிந்து வீட்டில் பூகம்பம் வெடித்தது. தோளுக்கு மேல் வளர்ந்த மகன் இருக்கையில் இந்த உறவு வேண்டாம் என எவ்வளவோ எடுத்து கூறியுள்ளார் தங்கவேல். ஆனால் ரத்த சொந்தமானாலும் அது ராஜாவிற்கு பிறகுதான் என்று விடாப் பிடியாக இருந்துள்ளார் விமலாராணி.
இதனால் இருவருக்கும் இடையே சண்டை வலுத்துள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றி அடுப்படியில் இருந்த அரிவாள் மனையை எடுத்து வந்து கணவனின் கழுத்தை அறுத்துள்ளார் அந்த மாட்சிமை பொருந்திய மனைவி. இதில் தங்கவேல் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். ராஜாவிற்கு போன் செய்து வரவழைத்த விமலாராணி, இறந்த கணவரின் உடலை காரில் எடுத்து சென்று ஆள் இல்லாத பகுதியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
தங்கவேலின் தம்பி விமலாராணியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மகன் ஆன்லைன் கிளாஸில் இருக்கிறேன் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளார். பின் அவரது மொபைல் ஸ்விச் ஆஃப் ஆகியுள்ளது. சந்தேகமடைந்த தங்கவேலின் குடும்பத்தினர் போலிசில் தகவல் அளித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 ம் தேதி பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அது யார் என அடையாளம் காணப்படாத நிலையில் காவல் நிலையத்தில் விமலாராணி தனது 14 வயது மகனுடன் சரண் அடைந்தார். இதையடுத்து விமலாராணியை கைது செய்த போலீசார் தலைமறைவான கள்ளக் காதலன் ராஜாவை தேடி வருகின்றனர். அழகான குடும்பத்தை தனது சல்லாபத்தால் சிதைத்து சின்னாபின்னமாக்கிய விமலாராணியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.