மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு எதிரான தேச துரோக வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ’நான் குற்றம்சாட்டுகிறேன்’என்ற புத்த வெளியீட்டு விழா கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ராணி சீதை மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், சென்னை எழும்பூர் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வைகோ இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வைகோவுக்கு எதிரான தேசதுரோக வழக்கை, செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Exit mobile version