கடையநல்லூரில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை புறக்கணித்த திமுகவினர்

கடையநல்லூர் அருகே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை திமுகவினர் புறக்கணித்தது, கூட்டணி கட்சி தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்த புளியங்குடியில் தென்காசி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்திற்கு காசு கொடுத்து ஆட்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் வைகோ பங்கேற்ற பிரசார கூட்டத்தை திமுகவினர் ஒட்டு மொத்தமாக புறக்கணித்ததால் அங்கு திமுக கொடிகள் ஏதும் வைக்கப்படவில்லை. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வைகோ பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு சென்றார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ மேற்கொண்ட பிரசாரத்தை திமுகவினர் புறக்கணித்தது கூட்டணி தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Exit mobile version