வைகோ மீதான தேச துரோக வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

இந்திய அரசுக்கு எதிராக பேசியதற்காக வைகோ மீது பதிவு செய்யப்பட்ட தேச துரோக வழக்கில், இன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியது இந்திய அரசுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இருந்ததால், அவர் மீது தேச துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

அதுதொடர்பான வழக்கு எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றச்சாட்டு பதிவு, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட 9 சாட்சிகளிடம் விசாரணை உள்ளிட்ட, அனைத்து விசாரணை நடைமுறைகளும் முடிந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று வர உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே, வைகோ மாநிலங்களவை உறுப்பினராவது உறுதியாகும் என்பதால், இந்த தீர்ப்பை தெரிந்து கொள்வதற்கு, அரசியல் விமர்சகர்களிடையே பெருத்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version