தற்காலிகமாக நியமிக்கப்பட்ட அசிரியர்களுக்கு ஊதியத்தில் உயர்வு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக அசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு வேண்டி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், பள்ளிகளில் உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்களின் தொகுப்பு ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவித்துள்ளார்.

Exit mobile version