இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது – அமைச்சர் உதயகுமார்

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்படைந்த நோயாளிகளுக்கு தரமான உணவு அளித்து வரும் அம்மா கிச்சனின் 50 வது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க தமிழக அரசு 2 கோடியே 8 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கி இருப்பதாகவும், தினமும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்காக இரண்டாம் தலைநகராக மதுரையை அறிவிக்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், காலத்தின் தேவைக்கேற்ப முதலமைச்சர், துணைமுதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்கள் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.  தமிழகத்தில் இ- பாஸ் முறை எளிமைப்படுத்தப் பட்டிருப்பதாகவும், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version